மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய . 1 ம் (20-03-2017 ) பங்குனி திங்கள் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது

0 comments

துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உற்சவம்  2017

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய. 1 ம் (20-03-2017 ) பங்குனி திங்கள் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது ..Video




துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உற்சவம்  2017...




வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 20-௦3-2017 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில் பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் துர்முகி வருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.
பங்குனி7 [20.03.2017] முதலாம் பங்குனித்திங்கள்
பங்குனி14 [27.03.2017 ]இரண்டாம் பங்குனித்திங்கள்
பங்குனி21 [03.04.2017]மூன்றாம் பங்குனித்திங்கள்
பங்குனி28 [10.04.2017]நான்காம் பங்குனித்திங்கள்
பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும்.
பக்தர்கள் காலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
பங்குனி7 [20.03.2017] முதலாம் பங்குனித்திங்கள்பங்குனி14 [27.03.2017 ]இரண்டாம் பங்குனித்திங்கள்பங்குனி21 [03.04.2017]மூன்றாம் பங்குனித்திங்கள்பங்குனி28 [10.04.2017]நான்காம் பங்குனித்திங்கள்பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும்.பக்தர்கள் காலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.




Share this article :
 photo SubscribeViaEmail.gif

Plz Comments ,Here....

 
Support : Creating Website Madduvilnet
Copyright © 2014 All Rights Reserved